sirghazi chattainathar
தேவாரம் பாடல் பெற்ற சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில் சட்டைநாதசுவாமி புராண பெயர்கள்:பிரம்மபுரம், சீர்காழி ஊர்: சீர்காழி மாவட்டம்: மயிலாடுதுறை மூலவர்: சட்டைநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர் உற்சவர்: சோமஸ்கந்தர் தாயார்: பெரியநாயகி, திருநிலைநாயகி தல விருட்சம்: பாரிஜாதம், பவளமல்லி தீர்த்தம்:பிரம்மத் தீர்த்தம் முதலாக 22 தீர்த்தங்கள் பாடல் வகை: தேவாரம் பாடியவர்கள்: சம்பந்தர், அப்பர், சுந்தரர் தொன்மை: 1000-2000 வருடங்களுக்கு முன் அமைத்தவர்: சோழர்கள் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவத்தலம். சம்பந்தரின் அவதாரத் தலம் . சம்பந்தர் ஞானப்பால் உண்டமை, பிரமன் வழிபட்டமை, புறாவடிவில் வந்த அக்கினியால் சிபி மன்னன் பேறுபெற்றமை முதலிய அற்புதங்கள் நிகழ்ந்த தலமென்பது தொன்நம்பிக்கை. திருஞானசம்பந்தர் ‘தோடுடைய செவியன்‘ என்று திருப்பதிகம் பாடியது இத்தலத்தில் ./ தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 14வது தலம் . மாணிக்கவா...